பெண்கள் வீட்டில் இருந்தே ஒய்வு நேரங்களில் செய்ய கூடிய ஒரு சிறந்த தொழில் தான் குளியல் சோப்பு (skin soap) தயாரிப்பு.
அதுவும் பெண்கள் ஒய்வு நேரங்களில் மிக எளிதில் செய்யக்கூடிய தொழிலாக இது விளங்குகிறது. இந்த தொழில் துவங்குவதற்கு இட வசதியோ, அதிக முதலீடோ மற்றும் வேலை ஆட்களோ தேவையில்லை.
ஒரு நபர் இருந்தாலே போதும் இந்த தொழிலை துவங்கலாம். தற்போது இந்த தொழிலுக்கு அதிக சந்தை வாய்ப்பு இருப்பதினால், அதிக இலாபமும் பெற இயலும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கூட இந்த தொழிலை பகுதி வேலையாக செய்து வருமானம் பெற இயலும்.
சரி வாங்க இந்த பகுதியில் இயற்கை முறையில் (skin soap) குளியல் சோப் எப்படி தயாரிப்பது என்று நாம் அறிந்து கொள்வோம் ..!
தேவையான மூலப் பொருட்கள்:
01.காஸ்ட்டிங் சோடா (caustic soda)
02.தேங்காய் எண்ணெய்
03.வாசனை திரவியம்
04.பிளண்டர்
05.அச்சு (விரும்பிய வடிவம்)
06.Food கலர்
07.தண்ணீர்
மேலதிக சேர்மானம் :
கற்றாழை ஜெல் , முல்தானி , அரைத்த வேப்பிலை, காய்ந்த ரோஸ் இதழ்கள் , கடலை மாவு , அரைத்த துளசி , மற்றும் பல
செய்முறை:
முக்கிய குறிப்பு :
சேர்மான அளவு 1 கப் காஸ்ட்டிங் சோடா(caustic soda ) இட்கு 2.5 கப் தண்ணீர் 6.5 கப் தேங்காய் என்னை (உதாரணம் 50g caustic soda X 125g தண்ணீர் X 325g தேங்காய் எண்ணெய் )
ஒரு பாத்திரத்தில் காஸ்ட்டிங் சோடா இட்டு தண்ணீரை ஊற்ற வேண்டும் நீரில் காஸ்ட்டிங் சோடா கலக்கும் போது அதீத வெப்பம் உருவாகும் அந்த வெப்பம் அடங்கிய பின்னர் (10-15 நிமிடம் கழித்து ) தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒரு பிளண்டரை அல்லது பீட்டர் (Beater) பயன்படுத்தி நன்றாக கலந்து விட வேண்டும்.
பின்னர் அதன் பிறகு மேலதிக சேர்மானங்களையு வாசனை திரவியங்களையும் நிறத்தையும் சேர்க்க வேண்டும்
பின்னர் அச்சில் இதை ஊற்றி 24 மணித்தியாலம் சென்ற பிறகு அச்சில் இருந்து அகற்ற வேண்டும்
சந்தை வாய்ப்பு:
இப்பொழுது சந்தையில் விற்கப்படும் குளியல் சோப்புகள் அனைத்திலும் அதிகளவு கெமிக்கல் இருப்பதினால், தோல் பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே அதிகளவு கெமிக்கல் கலக்காத குளியல் சோப்பை நம் வீட்டில் இருந்தபடியே தயாரித்து தரமானதாக சந்தையில் விற்பனை செய்தால், அதிக வாடிக்கையாளர்களை தாங்கள் ஈர்க்க முடியும். அதுமட்டும் இல்லாமல் உங்கள் வீட்டு பகுதியில் சிறிய பெட்டி கடைகளில் மற்றும் சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்து இலாபம் பெற இயலும்.
முக்கிய குறிப்பு:
சோப் தயாரித்த உடனே பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. 30 – 45 நாட்களுக்கு பிறகு தான் பயன்படுத்த வேண்டும்.
ஏன் என்றால் இந்த குளியல் சோப் தயாரிக்க பயன்படுத்தியுள்ள காஸ்ட்டிக் சோடாவில் இருக்கும் கெமிக்கல் தன்மை முழுவதும் வெளியேறுவதற்காக 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
கலவைகளை கைகளில் கலந்து விட கூடாது, கண்டிப்பாக கரண்டியாலோ அல்லது பிளண்டராலோ மட்டுமே கலந்து விட வேண்டும்.
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved