அதிக லாபம் தரும் சலவை சோப்பு தயாரிப்பு – Business Ideas Tamil
சலவை சோப்பு தயாரிப்பு முறை!!!
இன்றைய அவசர உலகத்தில், நகரங்களில் வசிக்கின்ற பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழுவதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
எனவே புதிதாக தொழில் தொடங்குபவர்கள் சோப் தயாரிப்பு முறையில் அதிக லாபம் பெறலாம், சுயதொழில் தொடங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த சுயதொழிலாக விளங்குகிறது. அதுவும் வீட்டில் சலவை சோப்பு தயாரிக்கும் முறை என்பதால்
இவற்றின் மூலம் அதிக லாபம் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
01. வாஷிங் சோடா – 12 கிலோ
02. Acid Slurry – 20 கிலோ
03. டினோபால் பவுடர் – 50 கிராம்
04. தண்ணீர் – 2 லிட்டர்
05. களிமண் பவுடர் – 5 கிலோ
06. கால்சைட்(Calcium Carbonate) (கல்மாவு) – 48 கிலோ
07. சிலிகேட் – 5 கிலோ
08. STPP(Sodium triphosphate) – 5 கிலோ
09.வாசனை திரவியம் சென்ட் – 200 மி.லி
10.நீல நிற பவுடர் – 50 கிராம்
தேவையான இயந்திரம்:
இதட்காக விசேடமான இயந்திரங்கள் இல்ல கலவையை மிக்ஸ் செய்ய ஏற்ற ஏதாவது ஒருய இயந்திரம்
சலவை சோப்பு தயாரிப்பு செய்முறை:
வீட்டில் சலவை சோப்பு தயாரிக்கும் முறை – சோப்பு தயாரித்தல் முறையில் முதலில் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது.
கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ,சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 லி ஆகியவற்றை கொட்ட வேண்டும்.
10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும்.
பின்பு எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும்.
இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும்.
இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார்.
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like & Share செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved