நூடுல்ஸ் என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாகும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வெளுத்து கட்டுவாங்க. எனவே நூடுல்ஸ் தயாரிப்பு முறைமூலம் அதிக லாபம் பெறலாம்.
மிக குறைந்த முதலீட்டில் குடிசை தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து விற்பனை செய்யலாம் நூடுல்ஸ் தயாரிப்பு விற்பனை மூலம் அதிக லாபமும் பெறலாம்.
நூடுல்ஸ் தயாரிப்பு முறை ..!
பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும்.
மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும்.
அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும்.
அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.
பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார்.
பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும்.
சோயா, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான்.
சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.
தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.
நூடுல்ஸ் தயாரிப்பு முறைக்கு தேவைப்படும் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்:
நூடுல்ஸ் தயாரிப்பு முறை பொறுத்தவரை மாவை பதப்படுத்தி, வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன இலங்கையில் Aruna Engineering Industries (Kandy Road, Warakapola) , Ran lanka Industries (Gurugama, Naiwala, Veyangoda) போன்ற பல இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்
எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.
கோதுமை, மைதா, சோயா, ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.
கட்டிட அமைப்பு:
நூடுல்ஸ் தயாரிப்பு பொறுத்தவரை இயந்திரங்களை நிறுவ, பொருட்களை இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25க்கு 25அடி நீள, அகலமுள்ள இடம்
சந்தை வாய்ப்பு:
நூடுல்ஸ் தயாரிப்பு முறையில் மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால் தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், பிராண்ட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்க தயாராக இருக்கின்றன.
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved