Business Ideas Tamil

Raising Of Entrepreneurs

உங்களின் போட்டியாளர்களை சமாளிப்பது எப்படி? – Business Ideas Tamil

அனைத்து துறைகளிலும் போட்டியாளர்கள் (competitor) இருக்கத்தான் செய்கிறார்கள். போட்டியாளர்கள் இருப்பதினால்தான் சந்தையில் (market) சிறந்த தரமான பொருள்கள் கிடைக்கிறது. சிறந்த சேவை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

சந்தையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்க தினம் தினம் புதிய விலை மலிவான பொருள்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. எனவே போட்டி என்பது தேவையான ஒன்றுதான்.

போட்டியை சமாளிக்க பின்வருவனவற்றை முயற்சி செய்து பாருங்கள் :

1. போட்டியை சமாளிக்க முதலில் உங்களின் பலம் (strength) மற்றும் பலவீனங்களை (weakness) ஆராய வேண்டும். அடுத்து உங்கள் போட்டியாளரின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய வேண்டும்.

2. உங்கள் பொருளின் தரம் (quality) மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

3. புதிய தொழில்நுட்பங்களால் (technology) உங்கள் பொருள் மெருகேற்ற வேண்டும். அந்த புதிய தொழில்நுட்பங்களை உங்கள் வாடிக்கையாளர் அறியும் வகையில் செய்யவேண்டும்.

4. உங்கள் வாடிக்கையாளர் சேவை (customer service) ஒரு எடுத்துக்காட்டாக அனைவருக்கும் விளங்க வேண்டும்.

5. வாடிக்கையாளரிடம் இருந்து வரும் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.

6. போட்டியாளர்கள் நம் பொருட்களை போல் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் போது அவர்களை விட சிறந்த பொருளை குறைவான விலைக்கு விற்க வேண்டும்.

7. தொடர்ந்து நமது பொருட்களின் தரம் மற்றும் சேவையை மேம்படுத்திய வண்ணம் இருக்கவேண்டும்.

8. நம் பொருட்களுக்கு ஏதேனும் மாற்றுப் பொருட்கள் சந்தையில் அறிமுகம் ஆகிறதா என்று கண்காணிக்கவேண்டும்.

9. நீங்கள் எப்போதும் உங்கள் போட்டியாளர்களை விட மூன்று படிகள் முன்னே இருக்கவேண்டும்.

10. உங்கள் பொருளை வாடிக்கையாளர் வாங்க காரணங்கள் என்ன? அதே போல் உங்கள் போட்டியாளர் பொருளை ஏன் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

11. உங்களை பற்றி வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்கள் போட்டியாளர்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

12. நீங்கள் போட்டிபோடும் சந்தையில் வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று எதிர்பாரக்கீறிர்கள்?

இவ்வாறு உங்கள் தொழிலை பாதிக்ககூடிய அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கவேண்டும்.

Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்
நன்றி – Admins

Like Our Business Ideas tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved  

Sponsors:

Recent Ideas:

[display-posts posts_per_page=”3″ image_size=”thumbnail” include_title=”true” ]

Like Our Business Ideas Tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved