Business Ideas Tamil

Raising Of Entrepreneurs

உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு தொழில் – Business Ideas Tamil

சொந்தமாக தொழில் துவங்குவதற்கு பல தொழில் வாய்ப்புகள் இருக்கின்றது. இருப்பினும் உணவு பொருள் சார்ந்த தயாரிப்பு தொழில் மூலம் விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம். அதிலும் குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சிப்ஸ் தயாரிப்பு தொழில் தற்போது அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே சிப்ஸ் தயாரிப்பு தொழில் செய்து தினமும் அதிக லாபம் பெறலாம்.

சரி வாங்க இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு தொழில் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்.

சந்தை வாய்ப்பு:

அனைத்து பேக்கரிகள் சில்லறைக் கடைகள், பார்கள், பெரிய ஓட்டல்கள், ஸ்வீட் கடைகள் போன்றவற்றுக்கு சப்ளை செய்யலாம். இதே இயந்திரத்தை கொண்டு வீல், பிரயம் போன்ற பொருட்களையும் பொரித்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.

தேவையான இயந்திரங்கள்

01.உருளைக்கிழங்கு தோல் சீவும் இயந்திரம் (Potato Peeler)
02.சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரம் (Potato Chips Cutting Machine)
03.தண்ணீர் வெளியேற்றி உலரவை வைப்பதற்கு
04.சிப்ஸ் வறுக்கும் இயந்திரம் (Electric Fryer Machine)
05.பாக்கெட் போடும் இயந்திரம்

மூலப் பொருட்கள்:

01.உருளைக்கிழங்கு
02.எண்ணெய்
03.மசாலாப் பொருட்கள்
04.பேக்கிங் பொருட்கள்

உருளைக்கிழங்கை முதலில் தோல் நீக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். உருளைக்கிழங்கு தோல் நீக்கி தண்ணீரில் கழுவி வெளிவரும். இந்தத் தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சிப்ஸ் வடிவில் வெட்டும் இயந்திரத்தில் போட வேண்டும். இங்கும் தண்ணீருடன் வெட்டி வெளிவரும் அதிகமான ஸ்டார்ச் கழுவிவிடும்.

ஈரமான உருளை சிப்ஸ்களை நீர் வெளியேற்றி காய வைக்க வேண்டும். இந்த சிப்ஸ்களை எண்ணெய் கொப்பரையில் கொட்ட வேண்டும். உருளைக்கிழங்கு சிப்ஸ் இதில் நன்றாகப் பொரிந்துவிடும். பின் எண்ணெயை வடியவிட்டு சிப்ஸ்களைத் தனியாக எடுக்க வேண்டும்.
இந்த சிப்ஸை ஒரு உருளும் இயந்திரத்தில் இட்டு தேவையான உப்பு, காரம் மற்றும் சுவைக்காக மசாலாப் பொருட்களைச் சேர்க்க வேண்டும். இப்போது சிப்ஸ்களை முறையாகப் பாலிதீன் பைகளில் போட்டு சீல் செய்து விற்பனை செய்யலாம். பல நாட்கள் வைத்து விற்பனை செய்ய நைட்ரஜன் கேஸ் பேக்கிங் செய்யலாம். அனைத்திற்கும் இயந்திரம் உண்டு.

அனைத்து இயந்தியுரான்களை வாங்குவதட்க்கு முதலீடு போதுமானதாக இல்லது விட்டால் இதில் முக்கிய இயந்திரங்களை மாத்திரம் கொள்வனவுசெய்து மீதி செயட்பாடுகளை இயந்திரங்கள் இல்லாமல் செய்ய முடியும்

Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்

Like Our Business Ideas tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved  

Sponsors:

Recent Ideas:

[display-posts posts_per_page=”3″ image_size=”thumbnail” include_title=”true” ]

Like Our Business Ideas Tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved