பொதுவாக அனைவருக்குமே ஐஸ் க்ரீம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் வென்னிலா பலருக்கு பிடித்தமானது.
குழந்தைகள்,பெண்கள் என்று எல்லோருக்கும் பிடித்தமானது இந்த ஐஸ் கிரீம் அதனால் இதற்கு எப்பவும் சந்தை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது
இந்த ஐஸ் கிரீம் வீட்டில் இருந்தே தயாரித்து விற்பனை செய்தால் நல்ல இலாபம் கிடைக்கும்
இதற்கு தேவை ஒரு டீ பிரிட்ஜ் (deep fridge) மற்றும் ஐஸ்கிரீம் கப்
500ml ஐஸ்கிரீம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
பால் – 250ml
3 முட்டை (மஞ்சள் கரு மட்டும்)
ப்ரஷ் க்ரீம் – 250ml
சர்க்கரை – 125g(அரைைைைத்து பொடியாக)
வென்னிலா எசன்ஸ் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாலை நன்கு கொதிக்க வைத்து, குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வென்னிலா எசன்ஸை , மற்றும் ப்ரஷ் க்ரீமையும்பாலுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்
அடுத்து முட்டை கருவுடன் சக்கரையை பீட்டரியின் (beater) உதவியுடன் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்
பின் பாலுடன், முட்டைக்கருவும் சக்கரையும் கலந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும், நன்றாக மிக்ஸ் ஆனா பிறகு மறுபடியும் அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்
குறிப்பு: பால் சூடாகி கொதிக்கும் வரை ஸ்பூன் கொண்டு கிளற வேண்டும்
சூடாக்கி கொதித்து ஆறியவுடன் ஒரு பாத்திரத்தில் இட்டு டீ பிரிட்ஜ் (deep fridge) இல் 2 தொடக்கம் 3 மணிநேரம் வைக்க வேண்டும்
அதன் பிறகு அந்தக் கலவையை வெளியில் எடுத்து பீட்டரின் உதவியுடன் நன்றாக 5 தொடக்கம் 10 நிமிடங்கள் வரை அடிக்க வேண்டும்
அதன் பிறகு அந்தக் கலவையை ஐஸ்கிரீம் கப்பில் ஊற்றி மறுபடியும் சில மணிநேரம் டீ பிரிட்ஜ்ல் வைக்க வேண்டும் அதன் பிறகு மிகவும் சுவையான வெனிலா ஐஸ்கிரீம் விநியோகிக்க முடியும்
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved