சாக்லேட் தயாரிப்பு ..!
சாக்லேட் தயாரிப்பு அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய , இந்தத் தொழிலில் இருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி அனுபவ பயிற்சி பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
அதுவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாக்லெட்டை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள்.
எந்த சீசனிலும் படுத்துப் போகாத பிசினஸ் சாக்லெட் தயாரிப்பு என்பதால் நிச்சயம் இந்த சிறு தொழில் முயற்சியில் கண்டிப்பாக ஜெயிக்கலாம்.
சரி வாங்க சாக்லேட் தயாரிப்பு முறைக்கு மூலப்பொருட்கள் என்னென்ன தேவைப்படும் சரி வாங்க சாக்லேட் தயாரிப்பு முறைக்கு மூலப்பொருட்கள் என்னென்ன தேவைப்படும்
இடவசதி:
சாக்லேட் தயாரிப்பு பொறுத்தவரை பெரிய அளவிலான முதலீடு தேவையில்லை. நமது வீட்டு சமையலறைதான் தயாரிப்புக்கான இடம்.
சாக்லேட் தயாரிப்பு பொருட்கள்:
இந்த சாக்லேட் தயாரிப்பு பொறுத்தவரை தண்ணீர் கொதிக்க வைக்க ஒரு பாத்திரம், சாக்லேட் கலவை செய்ய ஒரு பாத்திரம் மற்றும் சாக்லேட் வடிவமைப்புக்கான மோல்டுகள், பேக்கிங் பேப்பர் ஆகியவைதான் தயாரிப்புப் பொருட்கள்.
மூலப்பொருட்கள்:
சாக்லேட் தயாரிப்பு பொறுத்தவரை மூலப்பொருட்கள் என்று பார்த்தால், டார்க் சாக்லேட் பார், மில்க் சாக்லேட் பார், முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் மற்றும் ட்ரை ஃப்ரூட் வகைகள்.
இவை எல்லாம் சேர்த்து குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாயிலும், அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாயிலும் வாங்கிக்கொள்ளலாம்.
சாக்லேட் தயாரிப்பு முறை பற்றி பார்ப்போம்..!
சாக்லேட் தயாரிப்பு முறை:
சாக்லேட் தயாரிப்பு பொறுத்தவரை சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் ரெண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும்.
அதேபோல் ட்ரை ஃப்ரூட்ஸும் நறுக்கி வைக்கவும். ட்ரை ஃப்ரூட்ஸுக்கு பதிலாக, நம்ம விருப்பத்துக்கு என்ன வேண்டுமென்றாலும் சேர்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அந்தப் பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களைக் கொட்டவும்.
கேஸ் ஸ்டவ்வின் தீயை ஒரே சூட்டில் வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் சூடானது மேலிருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.
கீழ் வைக்கும் பாத்திரத்தைவிட, மேல் வைக்கும் பாத்திரம் பெரிதாக இருக்க வேண்டும், அப்போதுதான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக ஈசியாக இருக்கும்.
சாக்லேட் கலவையைக் கலக்கிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் கலவை கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் குறைந்தால் ஊற்ற வேண்டும்.
சாக்லேட் பீஸ்களைப் போட்ட பின் ஸ்பூனால் கட்டியில்லாமல் நன்கு கலக்கவேண்டும். சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வரவேண்டும்.
பின்னர், சாக்லேட் எந்த வடிவத்தில் செய்யப்போகிறோமோ அந்த மோல்டில் உள்ள ட்ரே எடுத்து அதனுள் ஊற்றவேண்டும்.
ட்ரேயில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்ப வேண்டும். அதன்மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ஃப்ரூட்ஸ் போடவும். பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்றவேண்டும்.
இந்த ட்ரேயை எடுத்து ஃப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்தால் சுவையான ஹோம்மேட் சாக்லேட் தயார்.
தயாரித்த சாக்லேட்டுகளை எடுத்து சரிகை பேப்பரில் பேக்கிங் செய்து விற்பனைக்கு கொடுத்துவிடலாம்.
இதே சாக்லேட் தயாரிப்பை பெரிய அளவில் செய்ய நினைத்தால் அதற்கான கருவிகள், இட வசதி, வேலை ஆட்கள் எல்லாம் கொண்டு தயார் செய்யலாம்.
பெரிய அளவில் சாக்லேட் தயாரிப்பில் இறங்க பெரிய முதலீடு தேவைப்படும்.
ஒரு நாளைக்கு வீட்டு வேலைகளுக்கு இடையே சாதாரணமாக ஒரு நபர் 5 கிலோ சாக்லேட்டுகள் வரை தயார் செய்யலாம்.
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like & Share செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved