Business Ideas Tamil

Raising Of Entrepreneurs

சுயதொழில் – தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி? – Business Ideas Tamil

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது.

நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

சரி வாங்க ஆயில் மில் (Oil Mill) தயாரிப்பு தொழில் பற்றி தெளிவாக படித்தறிவோம்..!

#சந்தை_வாய்ப்பு:
உணவு பொருட்களின் தேவை இருக்கும் வரை எண்ணெய்கள் தேவை இருக்கும்.
எனவே இவற்றின் தேவை சந்தையில் அதிகளவு கலைக்கட்டியிருக்கும்.

#முதலீடு:
எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான்.

ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 – 20 (அண்ணளவாக) லட்ச ரூபாய் தேவைப்படும்.

#கட்டிட_அமைப்பு:

ஆயில் மில் சுயதொழில் தொடங்க குறைந்தபட்சம் 30 சதுர மீட்டர் , அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும்.

தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.

#வேலையாட்கள்:

இந்த சுயதொழில் துவங்குவதற்கு வேலையாட்களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.

#தேவையான_மூலப்பொருட்கள்:

இந்த தயாரிப்பு தொழில் துவங்க நில கடலை, தேங்காய், சோயா பீன்ஸ், எள் போன்றவைதான் முக்கியமான பொருட்கள் ஆகும்.

இவற்றில் எது உங்களுக்கு எளிதாக கிடைக்குமோ அவற்றை வாங்கி நீங்கள் எண்ணெய் உற்பத்தி செய்யலாம்.

சில இடங்களில் எல்லா மூலப்பொருட்களும் கிடைக்கும்பட்சத்தில் எல்லா விதமான எண்ணெய்களும் உற்பத்தி செய்யலாம்.

இருப்பினும் ஒவ்வொரு எண்ணெக்கும் தனித்தனி இயந்திரங்கள் தேவைப்படும். ஒரு இயந்திரத்தில் ஒரு வகை எண்ணெயை மட்டுமே தயாரிக்க இயலும்.

#இயந்திரங்கள்:

இந்த ஆயில் மில் தயாரிப்பு தொழில் துவங்க எக்ஸ்பெல்லர் (Virgin Coconut Oil Expeller Machine), வடிகட்டும் இயந்திரம், பாய்லர்(Boiler), அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 2-3 இலட்சம் ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் பகுதிகளில் இலகுவாக்க கிடைக்கும் .

தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம்.

இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள்.

பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது.

இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like & Share செய்யுங்கள்

Like Our Business Ideas tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved  

Sponsors:

Recent Ideas:

[display-posts posts_per_page=”3″ image_size=”thumbnail” include_title=”true” ]

Like Our Business Ideas Tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved