புதிதாக தொழில் தொடங்க ஆரம்பிக்கும் தொழிலாளர்களுக்கு, செல்லோ டேப் தயாரிப்பு ஒரு சிறந்த தொழிலாகும். இந்த தொழிலில் அதிக சந்தைவாய்ப்புகள் உள்ளது. அதாவது ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறை கடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்த செல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் அதிக லாபமும் பெற இயலும்.
சரி வாங்க செல்லோ டேப் தயாரிப்பு முறை பற்றி இப்போது நாம் காண்போம்..!
முதலீடு:
செல்லோ டேப் தயாரிப்பு பொறுத்தவரை ஆண்டுக்கு 1.50 லட்சம் மீட்டர் செல்லோ டேப் தயாரிக்க சுமார் 18 லட்சம் முதலீடு தேவை.
தேவையான பொருட்கள்:
செல்லோ டேப் தயாரிப்பு பொறுத்தவரை ஃபோர்ம் டேப் கிரேடு ஃபிலிம் (foam tape grade film) , அடிசிவ் (adhesive gum) . இந்த இரண்டும்தான் முக்கியமான மூலப் பொருட்கள் ஆகும்.
மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள்:
இலங்கையின் நாங்கள் அறிந்த வகையில் Max Enterprises எனும் Colombo-12 இல் அமைந்துள்ள நிறுவனத்தில் கிடைக்கும். மேலும், அடிசிவ் என்பது பசை. முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் இதை, அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
கட்டிட அமைப்புகள்:
செல்லோ டேப் தயாரிப்பு பொறுத்தவரை இயந்திரங்களை பொருத்துவதற்கு, தயார் செய்த செல்லோ டேப்பை ஸ்டோர் செய்து வைப்பதற்கு என்று 1,500 முதல் 4,000 சதுரடி வரை இடம் தேவைப்படும்.
தேவைப்படும் இயந்திரங்கள்:
கோட்டிங் இயந்திரம்(coding) , ஸ்லைட்டிங் (Slitting) மற்றும் ஸ்லைசிங் (slicing) இயந்திரம். இந்த மூன்றும்தான் முக்கிய இயந்திரங்கள்.
செல்லோ டேப் தயாரிப்பு முறை (How to make cello tape):
மூலப் பொருட்களான அடிசிவ் எனப்படும் பசையை டேப் கிரேடு ஃபிலிம் ரோலில் கோட்டிங் இயந்திரத்தின் மூலம் கோட்டிங் செய்ய வேண்டும்.
இந்த பசை ஈரப்பதத்துடன் இருப்பதால் அதனை பாய்லரில் 140 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் சூடுபடுத்தினால், செல்லோ டேப்பாக வந்துவிடும்.
காட்டன், நைலான், பிளாஸ்டிக் என பல வகையிலும் இந்த செல்லோ டேப்பைத் தயாரிக்கலாம்.
செல்லோ டேப் தயாரான பிறகு இதனை ஸ்லைசிங் இயந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் 5, 12, 15 மில்லி மீட்டர் என்கிற அளவுகளில் கட் செய்து கொடுத்துவிடலாம்.
மேலும், செல்லோ டேப்பில் ஏதேனும் வாசகம் பிரின்ட் செய்ய வேண்டும் எனில் கலர் பிரின்டிங் இயந்திரத்தின் மூலம் பிரின்ட் செய்து கொள்ள முடியும்.
12,000 மீட்டர் டேப் கிரேடு ஃபிலிம்மில் 20,000 மீட்டர் செல்லோ டேப் தயாரிக்கலாம்.
இந்த செல்லோ டேப் தயாரிப்பு தொழிலின் பிளஸ்:
பேக்கிங் செய்வது அனைத்து விதமான தொழில்களுக்கும் இன்றியமையாத விஷயம். எனவே, இதற்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். தவிர, அதிக அளவிலான தயாரிப்பாளர்கள் கிடையாது என்பது கூடுதல் பலன்.
இந்த செல்லோ டேப் தயாரிப்பு தொழிலின் மைனஸ்:
மூலப் பொருட்களின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like & Share செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved