Business Ideas Tamil

Raising Of Entrepreneurs

டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழில் – Business Ideas Tamil

சிறு தொழில் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெறக்கூடிய ஒரு சிறந்த சிறு தொழில் வாய்ப்பை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் பார்க்கப்போகிறோம், அது என்ன தொழில் என்று பார்த்தோமானால், அது தான் டி ஷர்ட் பிரிண்டிங் தொழில், இந்த சிறு தொழில் துவங்குவதற்கு அதிக முதலீடு ஒன்றும் தேவையில்லை, குறைந்த முதலீடு இருந்தாலே போதுமானது. இந்த சிறு தொழில் பொறுத்தவரை சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது என்பதால் தயக்கம் இல்லாமல் இந்த சிறு தொழிலை துவங்கலாம்.

சரி வாங்க டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழில் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க…

முதலீடு:

இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தது 100,000/- தொடக்கம் 150,000/- வரை தேவைப்படும். எனவே 200,000/- இருந்தால் இந்த தொழிலை துவங்கலாம்.

மூலப்பொருட்கள்:

டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை முக்கிய மூல பொருட்களே டி ஷர்ட் தான், எனவே டி ஷர்ட்டை மொத்த விலையாக மஹரகமவில் வாங்கி கொள்ளலாம் அல்லது அலிபாபா போன்ற இணையதளங்களில் இருந்து மொத்தமாக குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும் .
இதை தவிர்த்து டி ஷர்ட் பிரிண்டிங் தயாரிப்பு தொழிலுக்கு sublimation paper, sublimation ink ஆகியவை அவசியம் தேவை.

டி ஷர்ட் பிரிண்டிங் இயந்திரம்:

டி ஷர்ட் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை சாதாரண normal epson printer மிசின் இருந்தாலே போதுமானது.

சந்தை வாய்ப்பு:

இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை, பிரிண்ட் செய்த டி ஷர்ட்டை அதிகளவு சிறுவயதினார்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்க கூடியதாக இருப்பதால், நீங்கள் வீட்டில் இருந்த படியோ அல்லது சிறிய கடை வைத்தோ விற்பனை செய்யலாம், குறிப்பாக ஏதேனும் பிரபல நடிகர் நடித்த திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது, அப்பொழுது அந்த நடிகரின் படத்தை டி ஷர்ட்டில் பிரிண்ட் செய்து விற்பனை செய்யலாம்.

மேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப டி ஷர்ட்டில் பிரிண்டிங் செய்து கொடுத்தாலும் நல்ல வருமானம் பார்க்க முடியும்.

Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like & Share செய்யுங்கள்

Like Our Business Ideas tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved  

Sponsors:

Recent Ideas:

[display-posts posts_per_page=”3″ image_size=”thumbnail” include_title=”true” ]

Like Our Business Ideas Tamil Facebook Page

Share With Your Friends :

Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved