டூப்ளிகேட் சாவி தயாரிப்பு தொழில்
இன்று வளர்ந்து வரும் நகர சூழலில் துணை சாவி எனப்படும், டுப்ளிகேட் சாவி அதிக தேவை உள்ளது
ஏன் என்றால் ஒரே அறையில் 5-துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்கும் சூழல் உள்ளதாலும், மேலும் அவர்கள் வேலைக்கு சென்று வரும் நேரமும் மாறுபடுவதால், அவர்கள் அறைக்கு வந்து போகும் நேரமும் மாறுபடுகிறது.
இதன் காரணமாக அனைவருக்கும் ஒவ்வொரு சாவி தேவைப்படுவதாலும், புதிய பூட்டு வாங்கும் போது 3 சாவிகள் மட்டுமே தரப்படும்.
எனவே அதிக சாவி தேவையெனில் டூப்ளிகேட் சாவி தான் செய்ய வேண்டும்.
மேலும் சாவிகள் தொலைந்து போவதால், முன்னதாகவே டூப்ளிகேட் சாவி தயாரித்து வைத்து கொள்ளுதல், போன்ற காரணங்களால் டூப்ளிகேட் சாவி தயாரிப்பு நல்ல இலாபம் தரும் ஓரு தொழிலாக வளர்ந்து வருகிறது.
யாருக்கு ஏற்றது இந்த தயாரிப்பு தொழில் :
முன்னதாக எதாவது ஓரு கடை வைத்து உள்ளவர்கள், இதை ஓரு துணை தொழிலாக செய்தால் மிக நன்று.
புதிதாக, தனியாக பெரு நகரங்களில் செய்ய ஏற்றது. ஆனால், உங்களுக்கு எல்லா வகையான சாவிகளும் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். மேலும் மகளிர்க்கு ஏற்ற தொழில்களில் இதுவும் ஒன்று.
இலாபம்:
இந்த தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 2,00 முதல், உங்களுக்கு தொழிலில் உள்ள ஈடுபாட்டை பொருத்து ரூபாய் 2,000 வரை எளிதாக வருமானம் பெற முடியும்.
ஏன்னெனில் ஒரு சாவி தயாரிக்க செலவு ரூபாய் 70 க்கும் குறைவு.
ஆனால் நாம் வாங்குவது 150 முதல் 250 வரை. மேலும் இந்த தொழிலில் போட்டி குறைவு என்பதால் ஓர் சிறிய ஊரில் கூட தினமும், குறைந்தது ரூபாய் 500 என்பது எளிதாக வருமானம் பார்க்கலாம்.
குறிப்பு:
இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை உங்களிடம் சாவி கேட்டு வரும் நபர்களிடம், அவர்களின் முகவரி சான்று நகல் வாங்கி வைத்துகொள்வது நன்று. ஏன்னெனில், போலீஸ் சமந்தமாக ஏதாவது விசாரணை வந்தால் உதவும்.
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like & Share செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved