தினமும் வருமானம் தரும் சீஸ் தயாரிப்பு
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவில் சீஸும் ( Cheese) ஒன்று
சீஸ் தயாரிப்பில் போட்டியாளர்கள் குறைவு அதனால் இந்தத் தொழிலில் பெரியளவில் முதலீடு செய்தும் தொடங்க முடியும் அல்லது சிறியளவில் முதலீடு செய்து வீட்டிலிருந்தே தயாரித்து விற்பனை செய்ய முடியும்
தேவையான பொருட்கள்:
01.பால்
02.வெள்ளை வினிகர்
03.உப்பு
04.தேவையான பாத்திரங்கள்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமாக சூடுபன்ன வேண்டும் பின்னர் அடுப்பை நிறுத்தி விட்டு வினிகர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும், கலக்கும் பொழுது பால் திரைந்து கட்டியாக ஆரம்பிக்கும்.
திரைந்து கட்டியாகிக்கொண்டிருக்கும் பொழுது மறுபடியும் வினிகர் ஊற்றி நன்றாக கலக்கவேண்டும் நன்றாக கலக்கியதும் சீஸ் வேறாகவும் தண்ணீர் வேறாகவும் பிரிந்து இருக்கும்.
குறிப்பு: வினிகர் சேர்மான அளவு 01L பாலுக்கு 50ml இருமுறை அதாவது ஒரு முறை 25ml சேர்க்க வேண்டும்
பின்னர் நீரை வேறாகவும் சீஸ் வேறாகவும் வடித்து எடுக்க வேண்டும்
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதை ஓரளவுக்கு சூடாக்க வேண்டும் சூடாக்கி எடுத்த நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து அந்த நீரில் தயார் செய்து வைத்துல்ள சீஸை அந்த நீரில் இட்டு நன்றாக பிசைந்து கழுவ வேண்டும் பின்னர் கையால் அமுக்கி நீரை வடித்தெடுக்க வேண்டும்
பிறகு தேவையான வடிவங்களில் வெட்டி பொலித்தீன் அல்லது அலுமினியம் போயில் (Aluminum Foil) காற்று & நீர் புகாத வண்ணம் பேக்கிங் செய்து 3-5 மணிநேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டி விற்பனைக்கு அனுப்ப முடியும்.
பெரிய முதலீட்டில் செய்வதாக இருந்தால் கீழ் காணும் இயந்திரதங்களை கொள்வனவு செய்து சீஸ் தயாரிக்க வேண்டும்
தேவையான இயந்திரங்கள் :
01.Processed Cheese Kettles
02.Processed Cheese Filling & Wrapping Machine
இவற்றை இலங்கையில் நாங்கள் அறிந்த வகையில் CMC Engineering Export GmbH , No 08, Rodrigo Mawatha, Nawala Road, Rajagiriya. பெற்றுக்கொள்ள முடியும்
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved