இப்போதெல்லாம் பிரஷர் குக்கர் இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பிரஷர் குக்கரை அனைவரது வீட்டிலும் பயன்படுத்துகின்றோம். எனவே நல்ல பொருளாதார வசதி உள்ளவர்கள், நடைமுறை மூலதனம் அதிகம் போடக்கூடிய தகுதி உள்ளவர்கள், பெரிய அளவில் விளம்பரம் செய்யும் எண்ணம் உடையவர்கள் இத்தொழிலை சிறப்பாக செய்யலாம்.
குறிப்பாக பல இடங்களில் பாத்திரக்கடை வைத்திருப்பவர்கள் இந்த சுயதொழில் துவங்கினால் நல்ல இலாபம் பார்க்க முடியும். குக்கரில் நேரம், எரிபொருள் செலவு குறைகிறது. எனவே 3, 5, 10 லிட்டர் கொள்ளளவுகளில் தயாராகி வருகிறது. 3 லிட்டர் அதிக அளவில் தயாரித்தால் விற்பனை அதிகமாகும்.
சரி வாங்க இந்த பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.
தேவைப்படும் இயந்திரங்கள்:
1.கில்லட்டின் ஷீயரிங் மிஷின்(Gillett’s Shearing Machine) – 1
2.சர்க்கிள் கட்டிங் மிஷின் (Circle Cutting Machine) – 1
3.டோக்கிள் பிரஸ் (மோட்டாருடன்) (Toggle Press With Motor) – 1
4.ஹைடிராலிக் பிரஸ் (50 டன்) (Hydraulic Press) – 1
5.ஹைடிராலிக் பிரஸ் (50 டன்) (Power press) – 1
6.லேத் மிஷின் (மோட்டாருடன்) (Lathe Machine) – 1
7.டிரில்லிங் மிஷின் (Drilling Machine) – 1
8.பப்பிங், பாலிஷிங் மிஷின் (Double ended Buffing and Polishing Machine) – 2
9.பெஞ்ச் கிரைண்டர்(Double ended bench grinder) – 2
8 மணி நேரத்தில் 100 குக்கர்கள் வரை தயாரிக்கலாம். வாரம் 600 முதல் 1000 வரை தேவையை பொறுத்து தயாரிக்கலாம்.
தேவையான மூலப்பொருட்கள், அலுமினிய அலாய் தகடுகள், ப்ரெஸ்ஸர் ரெகுலேட்டர், பேக்லைட் ஹண்ட்ஸ், கேஸ்கட், பிளக்ஸ், ஸ்க்ரூக்கள் போன்ற பல பொருட்கள், அட்டைப் பெட்டிகள் கொழும்பு மற்றும் முக்கிய தொழில் நகரங்களில் கிடைக்கிறது. இவற்றை தயாரிப்பது என்பது எளிது. பெரிய தொழில்நுட்பம் தேவையில்லை.
முதலில் தகடுகளை வட்ட வடிவில் வெட்டி, தொடர்ந்து இதர பாகத்தை தயாரித்து துளையிட்டு அசெம்பிள் செய்து பின்னர் பேக்கிங் செய்வார்கள்.
பணியாளர்கள்:
01.நிர்வாகி – 1
02.மேற்பார்வையாளர் – 1
03.வேலையாட்கள் – 3
04.உதவியாளர்கள் – 4
05.பேக்கிங் – 1
ஆக 10 பேருக்கு வேலை தரலாம்.
குறிப்பு : இந்த தொழிலுக்கு உரிய Basic Business Proposal ஓன்று கைவசம் உள்ளது தேவைப்படுவோர் உங்களுடைய ஈமெயில் முகவரியை Msg செய்யவும் இலவசமாக அனுப்பி வைக்கின்றோம்
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved