மெழுகுவர்த்தி தொழில் மிகவும் பழமையான தொழில் என்றாலும் இன்று வரை மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இந்த தொழில் மிகவும் உகந்தது.
இந்த தொழிலை துவங்குவதற்கு ஒருவர் மட்டும் இருந்தாலே போதும். தினமும் வீட்டில் இருந்தபடியே குறைந்தபட்சம் 5 கிலோ முதல் அதிகபட்சம் 25 கிலோ வரை மெழுகு வர்த்தியை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது.
மெழுகுவர்த்தி தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:
01.பெட்ரோல் கழிவில் இருந்து கிடைக்கும் மெழுகு (Paraffin wax) இதை செமிகேல் கடைகளில் பேயுக்கொள்ள முடியம் ,
02.காட்டன் நூல்,
03.அச்சு இல்லாவிட்டால் பாவித்துத் தூக்கி எறியும் (disposable cup (plastic or paper) ),
04.அலுமினிய டிரே,
05.மெழுகு ஊற்றுவதற்கான கோப்பை,
06.கட் செய்ய சிறிய கத்தி,
07.மெழுகு உருக்க அடுப்பு,
08.அச்சில் மெழுகு ஒட்டாமல் இருக்க தேங்காய் எண்ணெய்,
09.கலர் வருவதற்கு புளோரிசன் கெமிக்கல்,
10.தண்ணீர் ஊற்றுவதற்கான பக்கெட்,
11.பேக்கிங் செய்வதற்கான பாலிதீன் கவர்கள்.
தயாரிப்பு முறை :
1.மெழுகுவர்த்தி தயாரிப்பு பொறுத்தவரை கடைகளில் கிடைக்கும் மெழுகை வாங்கி வந்து ஒரு அலுமினிய பாத்திரத்தில் நீரை ஊற்றி அத்தானும் ஒரு அலுமினியம் பாத்திரத்தை வைத்து அதட்க்குள் மெழுகை வைத்து சூடேற்ற வேண்டும். சூடேற்றும் பொழுதே நிறங்கள் சேர்க்க விரும்பினால் சேர்க்க வேண்டும்
2.அச்சில் மெழுகு ஒட்டாமல் வருவதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக தடவவேண்டும்.
3.பின்பு சூடேற்றிய மெழுகை அச்சில் ஊற்ற வேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து மெழுகு ஊற்றப்பட்ட அச்சை வாளி தண்ணீரில் போட வேண்டும்.
3.சூடாக இருந்த மெழுகு மற்றும் அச்சு குளிர் நிலைக்கு வந்ததும், அச்சில் இருந்து மெழுகுவர்த்திகளை ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும்.
மெழுகுவர்த்தியை நீளமாக தான் உருவாக்க வேண்டும் என்று இல்லை. எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்.
அதேபோல் வெள்ளை நிறம் மட்டுமல்லாமல், எந்த நிறத்தில் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்களுக்கு என்ன வண்ணம் தேவைப்படுகிறதோ அதற்கு ஏற்றவாறு கலர் கெமிக்கல்களை பயன்படுத்த வேண்டும்.
குறைந்த முதலீட்டில் வீட்டில் இருந்து இலகுவான முரையில் உட்பத்த்தி செய்து விற்பனை செய்தால் நிச்சயம் அதிக இலாபம் கிடைக்கும்
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like & Share செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved