வணிக ரீதியாக பயிரிட்டால் நல்ல வருமானம் நிச்சயம் என்றாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் கற்றாழை சாகுபடி குறித்து யோசிப்பதில்லை. வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்கள் மற்றும் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பவர்களுடன் கூட்டுவைத்துக் கொள்ளும்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்பது உண்மை.
கற்றாழை ஒரு உலர் மற்றும் உவர் நிலப்பயிராகும் மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது.
சோற்றுக் கற்றாழையை வாழை சாகுபடியில் பக்க வாழையை எடுத்து நடுவது போன்றே பயிரிட வேண்டும். மூன்று அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் சோற்றுக் கற்றாழையை நடலாம். பத்து நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்
சோற்றுக் கற்றாழை செழித்து வளர்ந்தால் கீற்றுகள் ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் 1 கிலோ எடை வரை பருமனாக இருக்கும். 1 கிலோ எடையுள்ள கீற்றுக்கு சந்தைப் பெறுமதி அதிகம்
களைகள் அதிகம் தேங்கவிடாமல் பார்த்துக் கொண்டால் உரம் போடத் தேவையில்லை. ஓரளவு சாண உரம் இட்டால் போதும். ஒரு முறை சோற்றுக் கற்றாழை நட்டால் ஓராண்டுக்கு பலன் கொடுக்கும். 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை அதன் கீற்றுகளை மட்டும் அறுவடை செய்யலாம்.
இது வெய்யில் காலத்துக்கு ஏற்ற பயிராகும். மருத்துவக் குணம் மிக்க சோற்றுக் கற்றாழைக்கு பூச்சி மருந்து அடிக்கத் தேவையில்லை. தண்ணீர் வசதியில்லாத கரடுமுரடான இடங்கள், பாறைகள் சூழ்ந்துள்ள இடங்கள் சுண்ணாம்பு பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் கூட சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும்.
இந்த சோற்றுக் கற்றாழை விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பலன் கொடுக்கும் பயிராக உள்ளது.
வளமற்ற மண் , மணற்பாங்கான நிலம் இதற்கு ஏற்றது எனினும் எல்ல வகையான மண்ணிலும் உட்பத்தய் செய்யமுடியும்
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்
நன்றி – Admins
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved