புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ஒரு தொழில் வாய்ப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
இடம்:
இந்த வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை, 100 சதுர அடி இடம் போதுமானது. குறிப்பாக இந்த சுயதொழில் வீட்டில் இருந்தே செய்ய கூடிய ஒரு சிறந்த தொழில்.
வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பது எப்படி?
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் நூறு பங்கு தண்ணீருக்கு 0.1 பங்கு வீதம் சிட்ரிக் ஆசிட்(citric acid) , 0.1 பங்கு வீதம் பொட்டாசியம் மெட்டா பை சல்பேட்டும் (Potassium metabisulfite) போட்டு கரைத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நன்கு முற்றிய வாழைக்காய்களை தோல் உறித்து, சீவல் மெஷின் மூலம் மெல்லியதாக சீவிக்கொள்ள வேண்டும். சீவிய வாழைக்காய் துண்டுகளை நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தண்ணீரில் 1 மணி நேரம் கழுவி எடுக்க வேண்டும்.
பின்னர் தண்ணீரை வடிகட்டி வாழைக்காய் துண்டுகளை மூங்கில் தட்டு அல்லது பாய்களில் பரவலாக பரப்பி வெயிலில் காயவிட வேண்டும்.
நன்கு காய்ந்த பிறகு வாழைக்காய் துண்டுகளை ஒரு அறையில் வைத்து ஒரு மண் சட்டியில் கரி நெருப்பு மூட்டி அதில் 3 கிராம் கந்தகத்தை(sulfite) போட்டு புகை காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
அதன் பிறகு மீண்டும் வாழைக்காய் துண்டுகளை வெயிலில் நன்கு காயவைத்து, பின்பு தேங்காய் எண்ணெய் அல்லது ரீபைண்ட்(refined oil) ஆயிலில் பொன்னிறமாக பொறித்து எடுத்து பாலிதீன் பைகளில் நிரப்பி விற்பனைக்கு அனுப்பலாம்.
தேவைப்படும் மூலப்பொருட்கள்:
இந்த தயாரிப்பு தொழில் பொறுத்தவரை வாழைக்காய் மிகவும் முக்கிய மூலப்பொருளாக இதனுடன் எண்ணெய், உப்பு, மிளகாய் தூள், பேக்கிங் செய்வதற்கு பை ஆகியவை அவசியம் தேவைப்படும்.
இயந்திரங்கள்:
01.வாழைக்காய் கழுவும் தொட்டி – 1
02.பெரிய சைஸ் பாத்திரம் – 1
03.பழத்தை உரிக்கும் கத்தி – 3
04.பழம் சீவும் இயந்திரம் (கையால் இயக்குவது) – 1
05.பேக்கிங் இயந்திரம் (கையால் இயக்குவது) – 1
Business சம்மந்தமான ஐடியாக்களை பெற்றுக்கொள்ள உடனடியாக இந்தப் பக்கத்தை Like செய்யுங்கள்
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved
Share With Your Friends :
Business Ideas Tamil Page is Non Profit Organization Page, All Rights Reserved